போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2022-07-19 16:56 GMT
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை - முத்துப்பேட்டை சாலையில் கைகாட்டி பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தின் அருகே இருசக்கர வாகனங்கள், கார்கள் போக்குவரத்துக்கு இடையூறாக அதிகளவில் நிறுத்தப்படுகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், வேலைக்கு செல்பவர்கள், வாகனஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக மாணவ-மாணவிகள் போக்குவரத்து நெரிசல் காரணமாக அவதியடைந்துவருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்