புதுச்சேரி அரசு சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு பஸ்கள் இன்னும் இயக்கப்படாததால் கிராமப்புற மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். காரைக்கால் முதல் விழிதியூர் செல்லும் கிராமப்புற மாணவர்கள் சரக்கு வாகனத்தில் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். மாணவர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு பஸ்களை இயக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.