சிவகங்கையில் இருந்து நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு இரவு நேரங்களில் குறிப்பிட்ட அளவே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் இங்கிருந்து பயணம் செய்யும் பயணிகள் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதிகளுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.