போக்குவரத்து நெரிசல்

Update: 2023-01-18 15:51 GMT

தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. கிராமப்புறத்தினர் அத்தியாவசிய பொருட்கள், துணிகள் வாங்க அரூருக்கு வருவது வழக்கம். இதனால் அரூர் கடைவீதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இருசக்கர வாகனங்களில் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் கடைகள் முன்பு வானங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இந்த போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கடைகளுக்கு முன் வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுரேஷ், அரூர், தர்மபுரி.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி