பயணிகள் அச்சம்

Update: 2023-01-01 13:18 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வேப்பூர் ஒன்றியம் புதுவேட்டக்குடி  பஸ் நிலையத்தில் தினமும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பஸ்  நிலையத்தின் பின்புறம் சீமை கருவேல மரங்கள் முளைத்து காடுபோல் காட்சி அளிக்கிறது. மேலும் குட்டை போல் நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் கழிவுநீரால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இப்பகுதியில் விஷ ஜந்துக்களின் நடமாட்டத்தால் பயணிகள் பெரிதும் அச்சப்படுகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி