கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ரவுண்டானா 4 சாலையானது பெங்களூரு, புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை மற்றும் சேலம், வேலூர் செல்லும் சாலையை இணைக்கும் மைய பகுதியாக உள்ளது. இதனால் அப்பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. எனவே ரவுண்டானா பகுதியில் போக்குவரத்தை சீர் செய்ய காலை மற்றும் மாலை நேரங்கள், பள்ளி நேரங்களில் போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும்.
-அண்ணாமலை, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.