மீண்டும் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2022-12-14 16:03 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் இருந்து திருப்பத்தூர் செல்லும் நகர பஸ்கள் குறைந்த அளவு இயக்கப்படுகிறது. இவ்வழியாக செல்லும் புறநகர் பஸ்கள் அங்கு நிற்பது இல்லை. இதனால் அப்பிநாயக்கன்பட்டி, சென்னானூர், சந்தகொட்டாவூர், ஆற்றுப்பாலம். ஊமையனூர், வண்ணாம்பள்ளி கூட்ரோடு, தனியார் கல்லூரி, சமத்துவபுரம், அருணபதி, புலிக்குட்டை, ஆதிசக்தி நகர் உள்ளிட்ட கிராமப்புறங்களுக்கு செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். ஏற்கனவே இயங்கிக் கொண்டிருந்த நேரங்களில் நகர பஸ்களை ஊத்தங்கரை மற்றும் திருப்பத்தூர் போக்குவரத்துக் கழக பணிமனையிலிருந்து நகர பஸ்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கண்ணாயிரம், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி. 

மேலும் செய்திகள்

பஸ்வசதி