கூடலூரில் இருந்து ஊட்டிக்கு 52 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதில் பைக்காரா, சூட்டிங் மட்டம் ஆகிய இடங்களில் சுற்றுலா வாகனங்கள் சாலையில் நிறுத்தப்படுகிறது. இதை முறைப்படுத்துவதற்கு போக்குவரத்து போலீசாரும் பணியில் இருப்பதில்லை. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே போக்குவரத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.