வெள்ளோடு மற்றும் அதைச் சுற்றியுள்ள முக்கிய சாலைகளின் விரிவாக்க பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகின்றன. இதற்காக ஆக்கிரமிப்பு கடைகள், மரங்கள் மற்றும் தேவையற்ற மின்கம்பங்கள் அகற்றப்பட்டன. இவ்வாறு அகற்றப்பட்ட பழுதடைந்த மின் கம்பங்கள் ரோட்டோரத்தில் போடப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. மின்கம்பங்களை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.