திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் தினசரி ஏற்படும் போக்குவரத்தை நெரிசலை தடுக்க சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அரக்கோணம் சாலைக்கு புறவழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இந்தநிலையில் ரெயில்வே நிர்வாகம் அனுமதி வழங்காததால் மேம்பாலம் அமைக்கும் பணி பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டது. ரெயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடித்தால் போக்குவரத்து நெரிசல் குறையும்.