மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருமணஞ்சேரி கோவில் வாசலில் பயணிகள் நிழற்குடை உள்ளது. தற்போது இந்த நிழற்குடை உரிய பராமிப்பின்றி உள்ளதால், திறந்த வெளி பாராக உள்ளது. மதுகுடிப்பவர்கள் அங்கேயே போட்டு செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பயணிகள் நிழற்குடையில் மது அருந்துவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.