புகார்பெட்டி எதிரொலி; பஸ்சின் மேற்கூரை சீரமைக்கப்பட்டது

Update: 2022-11-09 09:53 GMT

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருமணஞ்சேரி கோவிலுக்கு மயிலாடுதுறையில் இருந்து அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சில் மேற்கூரை சேதமடைந்து காணப்பட்டது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் பஸ்சுக்குள் வழிந்து பயணிகள் மழையில் நனைந்து கொண்டு பயணம் செய்து வந்தனர். இதன்காரணமாக பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக பஸ்சின் மேற்கூரை சீரமைக்கப்பட்டது. செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அரசு அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் பாராட்டையும், நன்றியையும் தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்

பஸ் வசதி