கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் இருந்து ஓசூர் சாலை, கிருஷ்ணகிரி ரோடு, சூளகிரி ரோடு, பாலக்கோடு ரோடு ஆகிய 4 சாலைகளின் இருபுறமும் கடைகளின் முன்பு மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிடுகிறார்கள். இதனால் பஸ், லாரி போன்ற வாகனங்கள் செல்லும் போது அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜா, ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி.