மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியை சுற்றி வைத்தீஸ்வரன் கோவில், தொழுதூர், கற்கோவில், திருப்பங்கூர், பட்டவர்த்தி, திருவாளபுத்தூர், கடுவன்குடி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் சீர்காழிக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் குறைந்த அளவிலான பஸ்கள் இயக்கப்படுவதால் மாணவ-மாணவிகள் பஸ்சில் கூட்ட நெரிசலில் சிக்கி அவதியடைகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட வழிதடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுப்பார்களா?
====