அரசு பஸ் பராமரிக்கப்படுமா?

Update: 2022-10-23 10:40 GMT
கூடலூரில் இருந்து வாட்ட வயலுக்கு சென்று வரும் அரசு பஸ் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதன் இருக்கைகள் பெரும்பாலானவை உடைந்து காணப்படுகிறது. மேலும் தரைதள பகுதிகளும் பலம் இழந்து காணப்படுகிறது. மழைக்காலத்தில் தண்ணீர் உள்ளே வழிந்து ஓடுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


சபாது குரிகள், கூடலூர்.

மேலும் செய்திகள்