மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் ஊராட்சி பகுதியில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. இவை சாலையின் குறுக்கே அடிக்கடி சென்று விடுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்துடன் சாலையில் சென்று வருகின்றனர். சில சமயங்களில் விபத்துகளும் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பன்றிகளை பிடித்து செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.