பயணிகளின் கோரிக்கை

Update: 2022-07-16 05:29 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் பஸ் நிலையத்தில் நகராட்சி சார்பில் தாய்மார்கள் பாலூட்டும் அறை திறக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக அந்த தாய்மார்கள் பால் ஊட்டும் அறை பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. இதனால் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு பால் ஊட்ட அறை இல்லாததால் பஸ் நிலையத்தில் ஆங்காங்கே அமர்ந்து செல்லும் நிலை உள்ளது. எனவே பயணிகளின் கோரிக்கையை ஏற்று தாய்மார்கள் பாலூட்டும் அறையை திறந்து பயன்பாட்டிற்கு வைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்