கூடுதல் பஸ் வசதி வேண்டும்

Update: 2022-10-19 11:16 GMT

நாகை மாவட்டம் திருக்குவளையில் இருந்து மேலப்பிடாகை பாப்பா கோவில் வழியாக நாகைக்கு செல்ல அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் மூலம் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் நாகைக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த பஸ்சில் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இதனால் மாணவர்கள் படிகளில் தொங்கியவாறு பயணம் செய்து வருகின்றனர். இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி