சிதம்பரத்தில் இருந்து கடலூருக்கு குறைவான பஸ்களே இயக்கப்படுகின்றன. குறிப்பாக இரவு நேரத்தில் ஒரு பஸ் கூட இயக்கப்படவில்லை. இதனால் தொழிலாளர்கள், அரசு அதிகாரிகள், வெளியூர் செல்லும் பயணிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் அவதிப்படுகின்றனர். இந்த நிலை மாற போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.