ஓசூர் மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து போலீசரால் சிக்னல் விளக்குகள் வைக்கப்பட்டுள்ளன. அவை இதுநாள் வரை செயல்பாட்டுக்கு வரவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். எனவே 24 மணி நேரமும் சிக்னல் உபயோகத்தில் இருந்தால் போக்குவரத்து சீர்படும். போலீசார் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுவதில் உள்ள சிக்கல் குறையும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்து சிக்னலை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சாயிநாத், ஓசூர்.