மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு மணல் ஏற்றிக்கொண்டு லாரிகள் செல்கின்றன. இந்த லாரிகளில் மணல் தார்ப்பாய் கொண்டு மூடப்படாமல் எடுத்து செல்லபடுகிறது. இதனால் காற்று வீசும் போது மணல் பறந்து பின்னால் வரும் வாகன ஓட்டிகளின் கண்கள் படுகிறது. இதன்காரணமாக நிலைதடுமாறி வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விபத்தை தவிர்க்க லாரிகள் மணலை முறையாக தார்ப்பாய் மூலம் மூடி எடுத்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?