கூடுதல் பஸ் வசதி வேண்டும்

Update: 2022-10-05 13:20 GMT

மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் இருந்து காலை மற்றும் மாலை நேரங்களில் இயக்கப்படும் பஸ்களில் தினமும் கூட்டநெரிசல் அதிகளவில் இருக்கிறது. இதன்காரணமாக மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்களில் மாணவர்கள் படிகட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இதனை பார்க்கும் பொதுமக்கள், பெற்றோர்கள் அசம்பாவிதம் எதுவம் ஏற்படும் என அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாணவர்கள், பொதுமக்கள் நலன் கருதி மயிலாடுதுறை பகுதியில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்

பஸ் வசதி