கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2022-07-15 13:18 GMT

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியில்  தாசில்தார் அலுவலகம் , ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் பள்ளி கல்லூரிகள் அதிகளவில் உள்ளது. இதனால் பல்வேறு கிராமங்களில் இருந்து வேலைக்கு செல்பவர்கள், மாணவ-மாணவிகள் குத்தாலத்துக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் குத்தாலத்துக்கு வருவதற்கு முறையான பஸ் வசதி இல்லை, பஸ்களும் குறைந்த அளவே இயக்கப்படுகின்றன. இதன்காரணமாக பொதுமக்கள், மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக மங்கநல்லூர்,கோமல், தேரழுந்தூர் பகுதிகளில் இருந்து போதிய பஸ்கள் குத்தாலத்துக்கு இயக்கபடுவதில்லை. எனவே, மேற்கண்ட பகுதியில் இருந்து குத்தாலம் பகுதிக்கு கூடுதல் பஸ்களை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்