நெல்லை மாநகர பகுதியில் ஏராளமான தனியார் டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் ஒரு சில பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வண்ணார்பேட்டையில் இருந்து டவுன் வரைக்கும் ரூ.8 கட்டணம் வசூலிப்பதற்கு பதிலாக ரூ.10 கட்டணம் வசூலிக்கிறார்கள். இதேபோல் டவுனில் இருந்து நெல்லை சந்திப்பு வருவதற்கு சில பஸ்களில் ரூ.7-க்கு பதில் ரூ.10 கட்டணம் வசூலிக்கிறார்கள். இதுகுறித்து பஸ் கண்டக்டர்களிடம் கேட்டால் முறையாக பதில் சொல்ல மறுக்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.