மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பஸ் நிலையத்துக்கு உள்ளூர் மட்டுமின்றி மதுரை, தஞ்சாவூர், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம் ,கடலூர், சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்தும் அதிகளவில் பஸ்கள் வந்து செல்கின்றன. இந்த நிலையில் மேற்கண்ட மாவட்டங்களில் இருந்து வரும் பஸ்கள் பகல் நேரத்தில் சீர்காழி பஸ் நிலையத்துக்கு வந்து செல்கின்றன. ஆனால் இரவு நேரங்களில் வரும் பெரும்பாலான பஸ்கள் சீர்காழி புறவழிச்சாலையிலேயே பயணிகளை இறக்கிவிட்டு செல்கின்றன. இதனால் பயணிகள் மிகுந்த அவதி அடைந்துவருகின்றனர். மேலும்,இரவு நேரத்தில் போக்குவரத்து இல்லாததால் சீர்காழி நகர்புறத்துக்கு வருவதற்கு வழியின்றி மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள், பயணிகள் நலன் கருதி அனைத்து நேரங்களிலும் பஸ்கள் சீர்காழி பஸ் நிலையத்துக்கு வந்த செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?