போக்குவரத்து நெரிசல்

Update: 2022-09-19 16:37 GMT

நாமக்கல் கோட்டை சாலையில் நரசிம்மசாமி கோவில், ஆஞ்சநேயர் கோவில் உள்ளன. இந்த கோவில்களுக்கு பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்கள் வாகனங்களை முறையாக நிறுத்துவதில்லை. இதனால் இந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக காலை, மாலை நேரங்களில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதை பார்க்க முடிகிறது. எனவே கோட்டை சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி