சேலம் மாவட்டம் வீரபாண்டி யூனியனை அடுத்த சின்னையூர், கொத்தனூர், கணவாய்க்காடு, பெருமாம்பட்டி வரை நெடுஞ்சாலையில் 2 பக்கமும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விபத்துகளும் அடிக்கடி ஏற்படுகின்றன. சாலையோரம் வாகனங்கள் நிறுத்தாதபடி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.