தென்காசிக்கு பயணிகள் ரெயில் இயக்க வேண்டும்

Update: 2022-09-09 10:18 GMT

தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கோவை, திருப்பூர், ஈரோடு பகுதியில் அதிக எண்ணிக்கையில் குடியிருந்து வருகிறார்கள். இவர் விசேஷ நாட்கள் மட்டுமல்ல அவ்வப்போது குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு சென்று வருகிறார்கள். அப்போது பஸ்களை மட்டுமே அவர்கள் நம்பி உள்ளனர். அதுவும் திருப்பூர் மற்றும் கோவையில் இருந்து நேரடியாக செல்லும் பஸ்களின் எண்ணிக்கை குறைவு. அரசு பஸ்கள் கிடைக்கா விட்டால் தனியார் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் அவர்களால் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்ல முடியவில்லை. மத்திய அரசு ஜிஎஸ்டி என்ற பெயரில் பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கான பணத்தை வசூல் செய்கிறது. எனவே தென் மாவட்ட மக்களின் நலன் கருதி கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு வழியாக தென்காசி, நெல்லைக்கு பயணிகள் ரெயிலை இயக்க பரிசீலிக்க வேண்டும்.


மேலும் செய்திகள்