மயிலாடுதுறை மாவட்டத்தில் மேக்கிரி மங்கலம், திருவாலங்காடு ஊராட்சிகளை இணைக்கும் வகையில் மகிமலையாறு ஆற்றில் பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலத்தின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் இந்த வழியாக தான் சென்று வருகின்றனர். தற்போது இந்த பாலத்தில் உள்ள தடுப்பு சுவர்கள் சேதமடைந்து உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாலத்தின் தடுப்பு சுவரை சீரமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்