சேலம் மாவட்டம் தொளசம்பட்டியிலிருந்து ஓமலூர் வரை 2 பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ் அரசம்பட்டி மக்கள் சென்று வருவதற்கு உதவியாக இருந்தது. தற்போது கடந்த 10 நாட்களாக இந்த பஸ் இயக்கப்படவில்லை. திண்டமங்கலம் ெரயில்வே பாலம் நீரூற்று காரணமாக எந்தநேரமும் நீர் அதிக அளவில் உள்ளதால் பஸ் மற்றும் பள்ளி கல்லூரி வாகனங்கள் 2 சக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் இடையூறாக உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட ெரயில்வே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு நிரந்தரமாக அங்கேயே நீரூற்று ஏற்பட்டுதேங்கும் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாணிக், தொளசம்பட்டி, சேலம்.