சேலம்- வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் ஊத்தங்கரை அருகே 3 கி.மீ. தொலைவில் திப்பம்பட்டி கிராமம் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் இல்லை. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், பொது மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே அங்கு நிழற்கூடம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வம், சேலம்.