சிக்னல் விளக்குகள் அமைக்க வேண்டும்

Update: 2022-09-03 16:29 GMT

கிருஷ்ணகிரியில் பெங்களூரு-சேலம் தேசிய நெடுஞ்சாலை ஆவின் மேம்பாலம் அருகே இணைகின்ற இடமாக உள்ளது. தினமும் ஏராளமான வாகனங்கள் இந்த பகுதியை கடந்து செல்கின்றன. இதனால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியாக காணப்படுகிறது. மேலும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த பகுதியில் சிக்னல் விளக்குகள் அமைத்தால் போக்குவரத்து நெரிசல் குறையும். விபத்துகள் ஏற்படுவதையும் தவிர்க்கலாம். சிக்னல் விளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-கிருஷ்ணன், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்