பஸ் வசதி வேண்டும்

Update: 2022-09-03 14:19 GMT


திருவாரூர் மாவட்டம் கோட்டூர் சனிஸ்வரன் கோவில் திருக்கொள்ளிக்காடு உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் இன்றி வெளிமாநிலத்தவர்களும் வந்து செல்வார்கள்.இந்த நிலையில் மன்னார்குடியிலிருந்து திருக்கொள்ளிகாடு கோவிலுக்கு ஒரு சில பஸ்களே உள்ளன. மேலும் கோட்டூரிலிருந்து பஸ் கிடையாது. சனிக்கிழமைகளில் பக்தர்கள் அதிகம் வருகின்றனர். அவர்கள் போதிய பஸ் வசதி இல்லாமல் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கூடுதல் பஸ்கள் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள்,திருக்கொள்ளிக்காடு

மேலும் செய்திகள்