மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூருக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். இதையொட்டி பயணிகள் நலன் கருதி திருக்கடையூரில் பழைய பஸ் நிலையம் அகற்றப்பட்டு புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த பஸ் நிலையத்தில் பஸ்கள் வரும் நேரத்தை குறிக்கும் கால அட்டவனை வைக்கப்படாமல் உள்ளது. இதன்காரணமாக வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் மற்றும் பயணிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் நிறுத்தத்தில் கால அட்டவணை வைக்க நடவடிக்கை எடுப்பார்களா?