கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியில் கல்குவாரிகளில் இருந்து டிப்பர் லாரிகளில் ஜல்லி கற்கள் ஏற்றி செல்லப்படுவது வழக்கம். அப்படி ஜல்லி கற்கள் ஏற்றி செல்லும் போது டிப்பர் லாரியின் மேற்பகுதியை மூடாமல் கொண்டு செல்கின்றனர். இதனால் சாலைகளில் எங்கும் ஜல்லி கற்கள் சிதறி விழுகின்றன. இருசக்கர வாகனங்களில் செல்வோர் மீது ஜல்லிகற்கள் விழுந்து காயம் அடைகின்றனர். எனவே ஜல்லி கற்கள் ஏற்றி செல்லும் டிப்பர் லாரிகளின் மேற்பகுதியை துணி அல்லது தார்ப்பாயால் மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பசுபதி, மத்தூர், கிருஷ்ணகிரி.