வேகத்தடை வேண்டும்

Update: 2022-07-10 14:06 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகம் எதிரே உள்ள முத்துப்பேட்டை சாலையில் வேகத்தடை இல்லை. இதனால் அந்த வழியாக வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகின்றன. இதன்காரணமாக மேற்கண்ட பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதன் எதிரொலியாக அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், தாலுகா அலுவலகத்துக்கு வருபவர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும், சாலையை கடந்து செல்பவர்களும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முத்துப்பேட்டை சாலையில் தேவையான இடங்களில் வேகத்தடை அமைக்கவும், வெள்ளைகோடுகள் வரையவும்  நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்