கூடலூரில் இருந்து ஓவேலி பேரூராட்சி காந்தி நகருக்கு செல்லும் அரசு பஸ்சின் மேற்கூரை மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் மழைக்காலத்தில் பஸ்சுக்குள் தண்ணீர் வழிந்தோடுகிறது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக மழை பெய்யும் சமயத்தில் கையில் குடைகளை பிடித்தபடி பயணிகள் பயணம் செய்ய வேண்டிய நிலை தொடர்கிறது. இது தொடர்பாக புகார் அளித்தும் பஸ்சை சீரமைக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.