காஞ்சிபுரம் மாவட்டம் மவுண்ட் பூந்தமல்லி சாலை மற்றும் முகலிவாக்கம் மெயின் ரோடு சந்திக்கும் இடத்தில் உள்ள போக்குவரத்து சிக்னல்கள் கடந்த ஒரு ஆண்டாக இயங்காமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், பொதுமக்கள் சாலையை கடக்க வெகு நேரமாகின்றது. சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் இதை கவனிப்பார்களா?