கூடுதல் நேர பஸ் வசதி தேவை

Update: 2022-03-18 09:32 GMT
சென்னை தியாகராயர் நகரில் இருந்து மாம்பாக்கம் வழியாக குளத்தூருக்கு செல்லும் பஸ்(தடம் எண்: எம்.51வி) தினமும் 1 மணி நேர இடைவெளியில் வந்து கொண்டிருந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக 3 மணி நேரத்திற்கு ஒரு முறை மட்டும் தான் இந்த பேருந்து இயக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகளும், பயணிகளும் நெடுநேரம் பஸ் நிறுத்தத்தில் காத்திருக்கும் நிலையுள்ளது. எனவே மாநகராட்சி போக்குவரத்து கழகம் ஆய்வு செய்து சீரான இடைவெளியில் இவ்வழியே பஸ் இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்