சிதம்பரம் காசுக்கடை தெரு முகப்பு, நடராஜர் கோவில் மேலகோபுர வாசல் மணிக்கூண்டு அருகே போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் ஆட்டோக்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் காலை மற்றும் மாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி ஆட்டோக்களால் விபத்தும் நிகழ்கிறது. எனவே ஆட்டோக்களை சாலையில் நிறுத்துவதை தடுக்க வேண்டும். சாலையோரத்தில் ஆட்டோக்களை நிறுத்த போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.