கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தின் நுழைவுவாயில் அருகே துருகம் சாலையில் சிலர் ஆட்டோக்களை தாறுமாறாக நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் பஸ்கள், பஸ் நிலையத்துக்கு சென்று வர பெரும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள், பயணிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.