பஸ்சில் ஆபத்தான பயணம்

Update: 2022-08-25 15:24 GMT

சேலம் மாவட்டம் எடப்பாடி வழியாக மாணிக்கம்பட்டி, பெருமாள் வளவு, காட்டு பாளையம் மற்றும் கட்டிநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து ஜலகண்டாபுரம் அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பஸ்சில் சென்று படிக்கும் மாணவர்கள் பஸ்கள் தாமதமாக வருவதாலும், பஸ் பற்றாக்குறை காரணமாகவும் பள்ளிக்கு தாமதமாக செல்லும் நிலை ஏற்படுகிறது. மேலும் மாணவர்கள் படியில் ஆபத்தான பயணம் செய்யும் சூழ்நிலை உள்ளது. எனவே மாணவர்களின் பாதுகாப்பு கருதி அந்த பகுதிக்கு கூடுதல் பஸ்கள் இயக்க போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மகேந்திரா, கரிக்காபட்டி, சேலம்.

மேலும் செய்திகள்