கூடலூரில் இருந்து மசினகுடி செல்லும் அரசு பஸ் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. பயணிகளுடன் செல்லும்போது நடுவழியில் பழுதடைந்து நின்று விடுகிறது. இதனால் உரிய நேரத்தில் இருப்பிடங்களுக்கு செல்ல முடியவில்லை. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பயணிகளுடன் சென்று அரசு பஸ் முதுமலை வனப்பகுதியில் நடுவழியில் நின்றது. இதனால் பயணிகள் அச்சம் அடைந்தனர். இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க சம்பந்தப்பட்ட துறையினர் பஸ்சை முறையாக பராமரிக்க வேண்டும்.