சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து கோரணம்பட்டி வழியாக கொங்கணாபுரத்துக்கு டவுன் பஸ் இயக்கப்பட்டது. அந்த பஸ் வாழகுட்டை, தாதாபுரம், கோரணப்பட்டி, நாசனூர், மூலப்பாதை ஆகிய ஊர்களின் வழியாக கொங்கணாபுரம் சென்றடையும். தற்போது அந்த பஸ் 6 மாதங்களாக வருவதில்லை. இதனால் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள், நோயாளிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து அந்த வழித்தடத்தில் மீண்டும் டவுன் பஸ் இயக்க வேண்டும்.
-சுதா, கோரணம்பட்டி, சேலம்.