போக்குவரத்து நெரிசல்

Update: 2022-07-09 08:51 GMT

குளச்சல் பீச் ரோடு வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. காலை மாலை நேரங்களில் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். அந்த பகுதியில் ஏராளமான வணிக வளாகங்கள் உள்ளன. இந்த வணிக வளாகங்களுக்கு வருகிறவர்கள் சாலையோரங்களில் தங்களின் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கிறார்கள். இதனால், அந்த பகுதியில் கடும் போக்குவரத்து ெநரிசல் ஏற்படுகிறது. சாலையில் வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அகமத், குளச்சல். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி