பஸ் வசதி வேண்டும்

Update: 2022-08-23 10:53 GMT

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறில் இருந்து, ஆயப்பாடி, மங்கநல்லூர் வழியாக கும்பகோணத்துக்கும், திருவாரூர் மருத்துவக்கல்லூரிக்கும், சிதம்பரத்துக்கும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இதனால் 50-க்கும் மேற்பட்ட கிராமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், சுற்றுலா பயணிகள் மிகுந்த பயன் அடைந்து வந்தனர். இந்த நிலையில் மேற்கண்ட வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த பஸ்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்