தஞ்சை பழைய மாரியம்மன் கோவில் சாலை வழியாக புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், அம்மாப்பேட்டை பகுதிகளுக்கு பஸ் போக்குவரத்து இருந்து வந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் பயனடைந்து வந்தனர். இந்த நிலையில் குறுகிய சாலை எனக்கூறி பஸ் போக்குவரத்து தற்காலிகமாக தடை செய்யப்பட்டது. தற்போது மேற்கண்ட பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் நிறைவடைந்து உள்ளது. இதனால் அந்த சாலை பஸ் போக்குவரத்துக்கு தயார் நிலையில் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீண்டும் மேற்கண்ட வழித்தடத்தில் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுப்பார்களா?