கோத்தகிரி பாண்டியன் பூங்காவில் இருந்து கேர்பன் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் குறுகிய சாலையில் தனியார் கட்டுமான பணிக்காக கருங்கற்கள் கொட்டி வைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அந்த வழியே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே கட்டுமான பொருட்களை சாலையில் இருந்து அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.