கொல்லிமலை அடிவாரம் முள்ளுக்குறிச்சியில் இருந்து சற்று தொலைவில் மெட்டாலா அமைந்துள்ளது. அங்குள்ள பஸ் நிறுத்த பகுதி 4 வழிச்சாலையாக இயங்கி வருகிறது. ஆனால் அங்கு நிழற்கூடம் இல்லாததால் பயணிகள் வெயிலிலும், மழையிலும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே முக்கிய சந்திப்பாக திகழும் மெட்டாலாவில் நிழற்கூடம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.