வேலூர்-ஆற்காடு சாலையில் சி.எம்.சி.மருத்துவமனை முன்பு சாலையின் இரு பக்கமும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார்கள் மற்றும் தரைக்கடைகள் ஆக்கிரமித்துள்ளன. அம்புலன்சுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் தினமும் நோயாளிகள், பொதுமக்கள் நெரிசல், போக்குவரத்துப் பாதிப்பு உள்ளது. சாலையோரம் மின்சார டிரான்ஸ்பார்மர்கள், மின்கம்பங்கள் போர்வையில் கடைகள் வைக்கப்பட்டுள்ளன. மின்சார டிரான்ஸ்பார்மர்கள், மின்கம்பங்களை அகற்றி சாலையோரம் அமைத்தால் போக்குவரத்துப்பாதிப்பு இருக்காது. இதுசம்பந்தமாக வேலூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கே.கார்த்திகேயன், தோட்டபாளையம், வேலூர்.